உள்ளடக்கத்துக்குச் செல்

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி49

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி49
PSLV-C49, EOS-01
திட்ட வகை9 செயற்கைக்கோள்களுடன்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இணையதளம்ISRO website
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்முனைய துணைக்கோள் ஏவுகலம்
விண்கல வகைமீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏற்புச்சுமை-நிறைகிகி
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்03:11:00, 7 நவம்பர் 2019 (2019-11-07T03:11:00) (IST)
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம்
ஏவலிடம்ஸ்ரீஹரிகோட்டா
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
----
முனைய துணைக்கோள் ஏவுகணைத் திட்டம்
← முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி48 முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி49

முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி49 (PSLV-C49) இந்திய முனைய துணைக்கோள் ஏவுகல வரிசையில் 51ஆவது ஏவுதல் ஆகும்.இந்த ஏவுதலில் இந்திய புவி கண்காணிப்பிற்கான ஈஓஎஸ்-01 மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இந்த ஏவுகலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் முதல் தளத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் மாலை 03.11 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.[1][2] இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் வணிகரீதியாக ஐக்கிய அமெரிக்க நாட்டின் 4 செயற்கைக் கோள்கள், லக்சம்பர்க்கைச் சார்ந்த 4 செயற்கைக்கோள்கள் மற்றும் லிதுவேனியாவின் 1 செயற்கைக் கோள் ஆகியவை வெற்றிகரமாக புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் ஏவப்பட்டன.


செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்

[தொகு]

ஏவூர்தியானது தரையில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 20 வினாடிகளுக்குப் பிறகு ‘ஈஓஎஸ்1’ செயற்கைக் கோளை புவி நீள்வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தியது. முன்னதாக 2020 நவம்பர் 7 ஆம் நாள் மாலை 3.02 மணிக்கு ஏவத்திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வு 10 நிமிடங்கள் தாமதமாகி 3.12 க்கு ஏவுகலன் விண்ணில் ஏவப்பட்டது. ஈஓஎஸ் - 01 புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சில நிமிடங்களில் வணிகரீதியாக கொண்டு செல்லப்பட்டிருந்த 9 செயற்கைக் கோள்களும் புவி வட்டப்பாதையில் ஏவி நிலைநிறுத்தப்பட்டன.

இந்திய செயற்கைக்கோளின் பயன்பாட்டு நோக்கம்

[தொகு]

இஓஎஸ்-1 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக ஏவப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PSLV-C49/EOS-01 - ISRO". www.isro.gov.in. Archived from the original on 2020-10-29. பார்க்கப்பட்ட நாள் 2020-11-08.
  2. "Earth Observation Satellite Is ISRO's First Launch Since Covid Lockdown". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-07.